மாவட்டத்தின் சிறந்த பள்ளி விருது, SMART CLASS, கணினி வழி கல்வி, RO குடிநீர், மாணவர்களின் பன்முகத் தன்மை வளர்த்து, மாணவர் சேர்க்கையில் அசத்தும் "மகுடஞ்சாவடி ஒன்றியம் கே.கே.நகர் ஊ.ஒ.தொ.பள்ளி"

 Send Your School Videos & Photos To aitperavai@gmail.com
WhatsApp : 9894782525
                   9597063944

#அரசு_பள்ளிகளை_காப்போம்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஒன்றியம் கே.கே நகர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.2015-16 கல்வி ஆண்டில் காமராஜர் பிறந்த கல்வி வளர்ச்சி நாளில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சேலம் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருதும், 2016_17 கல்வி ஆண்டில் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையில் சேலம் மாவட்டத்தின் சிறந்த பள்ளிக்கான விருதும் பெற்ற பள்ளி.
  

மேலும், சேலம் மாவட்டத்தில் தூய்மையான பள்ளியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களால் பாராட்டுச் சான்று வழங்கப்பட்ட பள்ளி.இப் பள்ளி  மரங்கள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் காட்சியளிக்கிறது. இப் பள்ளிக்கு  170 புரவலர்கள் உதவி செய்து கொண்டுள்ளனர்.மேலும் 2017_18ம் கல்வியாண்டில் ரூ 1,50000/- மதிப்பில் கல்விச் சீர் பெற்றுள்ளது.

தொடர்ந்து 3 ஆண்டுகளாக கொடையாளர்கள் மற்றும் நண்பர்கள் குழுக்களின் உதவியுடன் மிகப்பெரிய அளவில் ஆண்டுவிழா மிகச்சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.  

நன்கு விசாலமான விளையாட்டு திடல்,11 வகுப்பறைகள்  , 2 மென்திறன் வகுப்பறைகள்,1கலையரங்கம்,1கணினி அறை, 1 உணவருந்தும் அறை , அனைத்து வகுப்பறைக்கும் தலா 2 மின்விசிறிகள் என அனைத்து வகை வசதிகளும்  கொண்டுள்ளது. இப்பள்ளியில் 330 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

9 ஆசிரியர்கள் கல்விப் பணியில் ஈடுபட்டுள்ளனர். SMC, VEC, PTA, பெற்றோர்கள், ஊர் மக்கள் என அனைவரின் நன்மதிப்பை பெற்று சென்ற கல்வி ஆண்டில் மட்டும் 115 மாணவர்கள் இப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.அ.ஞானகௌரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் திரு. மதன்குமார், அவர்களின் வழிகாட்டுதலால்  பள்ளி மென்மேலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. 

மகுடஞ்சாவடி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. பிரேம் ஆனந்த் மற்றும் தலைமை ஆசிரியர் திரு.ப.வையாபுரி, BRTEs மற்றும் ஆசிரியர்களின் சீரிய முயற்சியாலும் இப்பள்ளியின் சாதனைகள் தொடர்கின்றன. இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தலைமை  ஆசிரியர்  ,  ஆசிரியர்கள்& SSA ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பா சிரியர்கள்  அனைவரும் வீடு வீடாக சென்று  மாணவர்களுக்கான அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.

THANKS
MR.SRINIVASAN,
BRTE, MAGUDANCHAVADI BLOCK

Comments