திட்டமிட்டபடி இன்று கோட்டை முற்றுகை : ஜாக்டோ - ஜியோ

'போராட்டத்தை முறியடிக்க மாநிலம் முழுவதும் 157 அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி இன்று நடக்கும்' என, ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


ஜாக்டோ- ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்க திட்டமிட்டு சிறுவிடுப்பு எடுத்துள்ளனர்.

நேற்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.மாநில ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: 


மாநிலம் முழுவதும் 157 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை செல்ல ஏற்பாடு செய்திருந்த வாகன உரிமையாளர்களை மிரட்டி ஆர்.சி., புக்கை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.மாநிலம் முழுவதும் இன்று 3.5 லட்சம் ஊழியர்கள் சிறு விடுப்பு எடுத்துள்ளனர். 

திட்டமிட்டபடி இன்று கோட்டை முற்றுகை நடக்கும்.ஆசிரியர் அரசு ஊழியர் சம்பளம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தவறான தகவல்களை தருகிறார். போராட்டம் தொடர்வதும், சுமுகமாக முடித்து வைப்பதும் அரசின் கையில்தான் உள்ளது, என்றனர்.

Comments