கடந்த பல ஆண்டுகளாக நமது தனிப்பட்ட தகவல்கள் , FACEBOOK மூலம் கைமாறியது இப்படி தான்.!

கேம்பிரிட்ஜ் அனலிட்டிகாவின், பேஸ்புக் நிறுவன "தகவல் திருட்டு " குற்றசாட்டை தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனத்தின் பல அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. 

கடந்த ஒரு வார காலமாகவே சரிவை (நஷ்டத்தை) சந்தித்து வரும் பேஸ்புக், அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நியூசிலாந்தில் இருந்து வெளியாகியுள்ள ஒரு தகவலானது பேஸ்புக் மீதான ஒட்டுமொத்த நம்பகத் தன்மையையம் தகர்க்கும் வண்ணம் உள்ளது. 


வெளியான தகவலின்படி கடந்த பல ஆண்டுகளாகவே, பேஸ்புக் நிறுவனமானது, ஆண்ட்ராய்டு சாதனங்களின் வழியாக பேஸ்புக் பயனர்களின் அழைப்பு பதிவுகள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டாவை சேகரித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கடந்த இரண்டு வருடங்களாக.! 

நியூசிலாந்தை சேர்ந்த டிலான் மெக்கே என்பவர், தனது பேஸ்புக் டேட்டாவை டவுன்லோட் செய்துள்ளார். அதில் தனது ஆண்ட்ராய்ட் தொலைபேசியிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்ந்த உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் சார்ந்த விவரங்கள் பதிவாகியுள்ளதை கண்டு அதிர்ந்துளார். 

ஒவ்வொரு அழைப்பின் நீளம்.! 

இந்த தகவல் திருட்டின் மிகப்பெரிய கொடுமை என்னவெனில், டிலான் மெக்கே யாருக்கெல்லாம் அழைப்புகளை நிகழ்த்தி உள்ளார், அவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் ஒவ்வொரு அழைப்பின் நீளம் போன்ற அனைத்து விவரங்களுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தான். 

ஐபோன் தளத்தில்.? 

இதனையடுத்து பல ட்விட்டர் பயனர்கள், பதிவிறக்கம் செய்யக்கூடிய தங்களின் பேஸ்புக் தரவுக் கோப்பில் (Downloadable Facebook data file) பல ஆண்டுகள் அல்லது மாதங்களாக அவர்களின் அழைப்பு வரலாறு சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்துள்ளனர். 

இந்த விவரங்கள் அனைத்துமே ஆண்ட்ராய்டு பயனர் தளத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளதும், ஐபோன் தளத்தில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 


இது எப்படி சாத்தியம்.? 

ஞாபகம் இருக்கிறதா.? உங்களின் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் வழியாக, பேஸ்புக் உங்களுக்கான சாத்தியமான நண்பர்களை பரிந்துரைக்கும். அங்கு தான் ஆரம்பித்துள்ளது இந்த வினை. ஆண்ட்ராய்டில் உள்ள பேஸ்புக் மெசேன்ஜர் ஆனது உங்கள் சாதனங்களில் நிகழும் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் பதிவுகளை அணுக ஒரு பயனரிடம் வெளிப்படையாகவே அனுமதி கேட்கும் - அதற்கு "யெஸ்" சொன்னவர்கள் மட்டுமல்ல, "நோ" சொல்லியிருந்தாலும் கூட சிக்கல் தான். 

இயல்பாகவே அணுக அனுமதிக்கும் திறன்.! 

ஒருவேளை மெசேன்ஜருக்கு நீங்கள் அந்த அனுமதியை வழங்கவில்லை என்றாலும் கூட, பேஸ்புக் மொபைல் ஆப் ஆனது குறிப்பிட்ட தரவை தானாகவே சேகரித்துள்ளது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஆண்ட்ராய்டு 4.1 (ஜெல்லி பீன்) இயங்குதளத்தில், உங்கள் அழைப்பு மற்றும் செய்தி பதிவுகளை இயல்பாகவே அணுக அனுமதிக்கும் திறன் பேஸ்புக்கிற்கு இருந்துள்ளது.  இது ஆண்ட்ராய்டின் தவறாகும்.


அனுமதியை வழங்காதீர்கள்.! 

இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், உங்கள் தனியுரிமை மீது அக்கறை இருந்தால், இனி பேஸ்புக் பயன்பாட்டில் உங்களின் அட்ரெஸ் புக், காண்டாக்ஸ் பட்டியல் அல்லது எஸ்எம்எஸ்களை சென்றடையும் அணுகல்களுக்கான அனுமதியை வழங்காதீர்கள்.

Comments