பிளிப் கார்ட்டை விலைக்கு வாங்கும் அமேசான்!




வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பிளிப்கார்ட்டின் ஒரு பங்கை வாங்க அமேசான் முயற்சித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமேசான் நிறுவனம். இந்தியாவில் அமேசானைப் போல், பிளிப்கார்ட்டு, ஸ்னாப் டீல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களும் பிரசத்தி பெற்றது.


இந்நிலையில், அமேசானுக்குப் போட்டியாக இருக்கும் வால்மார்ட் நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கி, வர்த்தக்ததில் முதல் இடத்தைப் பிடிக்க எண்ணியது.

ஆனால், வால்மார்ட்டின் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட அமேசான் நிறுவனம், முன்னெச்சரிக்கையாக தற்போது பிளிப்கார்ட்டை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


அதன் முதற்கட்டமாக பிளிப்கார்ட்டின் பங்குகளை வைத்துள்ள இரண்டாம் நபர்களிம் இருந்து அதனை வாங்க துவங்கியுள்ளது. இதனால், பிளிப் கார்ட்டை நிறுவனத்தில் முதலீடு செய்து தன் பக்கம் கொண்டு வர முயற்சிக்கும் வால்மார்ட்டுகு்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Comments