பிளஸ் 1 வேதியியல் கடினம்; கணிதப்பதிவியல், 'ஈசி'

பிளஸ் 1 வகுப்புக்கு, நேற்று நடந்த வேதியியல் தேர்விலும், வினாக்கள் மிகவும் கடினமாக இருந்த தாக கூறப்படுகிறது.பிளஸ் 1 பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும்,

கடினமானவினாக்களே கேட்கப்படுவதால், அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற கவலை, மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று வேதியியல் மற்றும் கணிதப் பதிவியல் தேர்வுகள் நடந்தன.வேதியியல் தேர்வில், மாணவர்கள் திணறும் வகையில், கடினமான கேள்விகள் இடம்பெற்றன.

பெரும்பாலான கேள்விகள், பாடத்தின் உட்பகுதி களில் இருந்து, புதிதாக கேட்கப்பட்டிருந்தன.அதனால், சராசரி மாணவர்களால், அனைத்து கேள்விகளுக்கும், முழுமையாக பதில் எழுத முடியவில்லை. சிரமம்குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்பட்டதாக தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில், தனியார் பள்ளிகள், உண்டு, உறைவிட மெட்ரிக் பள்ளி கள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள், சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றதால், நேற்றைய தேர்வுகளை, சிரமமின்றி எழுதியுள்ளனர்.அவர்களும், மொத்தம், 70 மதிப்பெண்களுக்கு, 60 வரை கிடைக்கும் என,தெரிவித்தனர்.

வேதியியல் தேர்வு குறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, தனியார் பள்ளி வேதியியல் ஆசிரியர், ஸ்ரீதர் கூறியதாவது:வினாத்தாளில், 18ம் எண்ணில் இடம் பெற்ற, 2 மதிப்பெண் கட்டாய கேள்வி; 27ம் எண்ணில் இடம்பெற்ற, மூன்று மதிப்பெண் கேள்வி ஆகியவை, பாடத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஒரு மதிப்பெண்ணில், ஆறு கேள்விகள், புத்தகத்தின் பயிற்சி கேள்விகளில் இருந்து தயாரிக்கப்பட்டு உள்ளன.ஐந்து மதிப்பெண் வினாக்களில், நான்கு மிக எளிமையானவை.

மாணவர்களின் தேர்ச்சிக்கு, இந்த வினாத்தாளால், எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், 'சென்டம்' வாங்குவது சிரமம் தான்.இவ்வாறு அவர் கூறினார்.வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு, நேற்று நடந்த கணிதப்பதிவியல் தேர்வு எளிதாக இருந்தது. அனைத்து மாணவர்களும், மகிழ்ச்சியுடன் தேர்வை எழுதினர். பல மாணவர்கள், தங்களுக்கு, சென்டம் கிடைக்கும் என்று, நம்பிக்கையுடன் கூறினர்.உயரும்

இது குறித்து, சென்னை, சவுகார்பேட்டை, ஏ.பி.பரேக் குஜராத்தி மேல்நிலை பள்ளி ஆசிரியர், பழனி கூறியதாவது:பெரும்பாலான கேள்வி கள், பாடத்தின் பின்பக்க பயிற்சி கேள்விகளாக இருந்ததால், மாணவர்கள் எளிதாக எழுதி விட்டனர்.வணிகவியல் எளிதாக இருந்தது போல, கணிதப்பதிவியலும் எளிதாக இருந்ததால், சென்டம் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments